Take a fresh look at your lifestyle.

அரசியல் தீர்வில் குழப்பத்தை ஏற்படுத்தியவர் ஜனாதிபதியே; ஶ்ரீநேசன் எம்.பி.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியல் தீர்வு ஆகியவற்றில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் நேற்றுமுன்தினம் மாலை அம்பிளந்துறை சுதந்திரம் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கலாசார விளையாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஞா.சிறிநேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“மக்களை மிகமோசமான நிலைமைக்குத் தள்ளிவிடக்கூடாது என் பதற்காகவே வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம். இந்தச் செயற்பாட்டினால் 50 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதிகளை அபிவிருத்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கையாளக்கூடிய நிலை யேற்பட்டுள்ளது.

இவ்வாறு அபிவிருத்திகள் ஒரு பக்கம் இருந்தாலும் அரசியல் தீர்வு என்பதே எங்களுக்கு மிக முக்கியமான விடயமாகும். இந்த அரசியல் தீர்வுக்காக நாங்கள் பேச்சுக்களை நம்பிக்கையுடன் முன்னெடுத்து வந்தோம். ஆனால் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியல் தீர்வு விடயத்தைக் குழப்பியுள்ளார்” என்றார்.

குறிப்பு:>