Take a fresh look at your lifestyle.

கோடீஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

கட்சியின் நிலைப்பாட்டை மீறி, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ரெலோ கட்சி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அந்தக் கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம், கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தின்போது இது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில் –

ரெலோ அமைப்பின் அரசியல் உயர்பீட கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக மற்றவர்கள் கூறுவதைப்போல எதுவும் நடக்காது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறுகின்றது. இதன்போது பல தரப்பட்ட பிரச்சினைகள் பேசப்படும் – என்றார்.

குறிப்பு:>