Take a fresh look at your lifestyle.

கோதா இல்லாவிட்டால் வெல்கம? ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவார்

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், குமார வெல்கமவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியில் நிறுத்துவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், சிறிலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அந்தக் கட்சியின் ஒரு பகுதியினர் கருதுகின்றனர். பொதுவேட்பாளராக குமார வெல்கமவை நிறுத்த வேண்டும் என்றுபொதுஜன பெரமுன தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

விரைவில் கூட்டு எதிரணி தலைவர்கள் இதுபற்றி சிறிலங்கா ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை, குமார வெல்கமவும், ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினர் தான் எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பு:>