Take a fresh look at your lifestyle.

பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை: ரணில் உறுதி

சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக மீண்டு களமிறக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் யோசனையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக நிராகரித்து விட்டார் என அறியமுடிகின்றது.

புதுவருடப் பிறப்புக்கு முன்னர் அலரி மாளிகையில் அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியயல்ல, சஜித் பிரேமதாஸ உட்பட்ட பலருடன் நாட்டின் அரசியல் நிலைவரம் குறித்து பேசிக் கொண்டிருந்தார் பிரதமர் ரணில். அப்போது அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸ, மீண்டும் ஜனாதிபதி மைத்திரியைப் பொதுவேட்பாளராக்கினால் ஜனாதிபதித் தேர்தலையடுத்து பழைய கசப்பான சம்பவங்களை மறந்து பரஸ்பரம் ஒன்றாகச் செயற்படலாமெனக் கூறியுள்ளார்.

அத்துடன் ராஜபக்ஷ முகாமில் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இழுபறி நிலைமை உள்ளதாகவும், இப்படிச் செய்யும் பட்சத்தில் அதன் நன்மைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் வருமென்றும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர் சஜித் இப்படி சொன்னகையோடு, ரணில் கடுப்பாக அதை நிராகரித்துள்ளார்.

பொதுவேட்பாளராக போட்டியிடுமளவுக்கு மைத்ரிக்கு மக்களிடத்தில் செல்வாக்கு இருக்கிறதா என்றும் சஜித்திடம் கேள்வியெழுப்பியுள்ளார். சுதந்திரக்கட்சிக்கு இருக்கும் ஆதரவாளர்கள், ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் இணைந்தால் சுலபமாக ஆட்சியை கைப்பற்றலாமென சஜித் சொல்லியிருக்கிறார்.

இதை கேட்ட ரணில், தனக்கேயுரிய பாணியில் – உங்களுக்கு ஒரு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. ஒரு தொகுதி ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள், மைத்திரிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்று என்று கூறியிருக்கிறார்.

குறிப்பு:>