Take a fresh look at your lifestyle.

பொன்சேகாவை சந்தித்துவிட்டே றோய் கோட்டாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளிகள் உள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இலங்கை படையினரால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறி அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்திருக்கும் கனேடியப் பிரஜை றோய் சமாதானம், இலங்கை வந்து முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான சரத் பொன்சேகாவை சந்தித்துவிட்டுச் சென்ற பின்னரே இந்தவழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிடவுள்ளார் எனச் சொல்லப்படுவதால் அது அந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ள ரணிலைப் பாதிக்குமெனக் கருதி – ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துவரும் குழுவின் முக்கியஸ்தரான சரத் பொன்சேகா உட்பட்டோர் இதன் பின்னணியில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதுவரை காலம் இல்லாமல் தேர்தல் காலத்தில் இப்படியான ஏற்பாடுகளைச் செய்வது கோட்டாவுக்குச் சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்கச் செய்யும் வேலையயன ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்புக்கள் அதிருப்தியையும் வெளியிட்டன.

குறிப்பு:>