முல்லைத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர் ஒருவருக்கே நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரிடமும் இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.