திருகோணமலையில் ஶ்ரீலங்கா ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக மாவீரர் நாள் நிகழ்வு

breaking
தென்தமிழீழம்: திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (27) மாவீரர்தின அஞ்சலி இடம்பெற்றது. கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆசா தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வந்த இந்த அஞ்சலி நிகழ்வே இம்முறை ஆளுனர் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றது. சிவன் கோயிலை சுற்றி இராணுவத்தினர் குவிக்கப்பட்டடிருந்ததால் அச்சமடைந்த ஏற்பாட்டாளர்கள், ஆளுனர் அலுவலகத்தின் முன்பாக நினைவு நிகழ்வை நடத்தினர். மாலை 6.05 மணியளவில் விளக்கேற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது.