ஜேர்மனி அருங்காட்சியகத்தில் பழங்கால நகைகள் கொள்ளை.

breaking
ஜேர்மனி அருங்­காட்­சி­ய­கத்தில் விலை­ம­திக்க முடி­யாத பழங்­கால நகைகள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக பொலிஸார் விசாரணை நடத்தி வரு­கின்­றனர். ஜேர்மனியின் தென்­மேற்கு பகு­தியில் உள்ள சாக்­சனி மாகா­ணத்தின் தலை­நகர் டிரஸ்­டனில் ‘கிரீன் வோலட்’ என்ற அருங்­காட்­சி­யகம் உள்­ளது. இங்கு ஐரோப்­பிய நாடு­களின் பழங்­கால பொக்­கி­ஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்­ளிட்­டவை பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த நிலையில் நேற்று முன்­தினம் அதி­காலை முக­மூடி கொள்­ளை­யர்கள் 2 பேர் அருங்­காட்­சி­ய­கத்தின் ஜன்னல் கம்­பி­களை உடைத்து உள்ளே நுழைந்­துள்­ளனர். பின்னர் அவர்கள் பழங்­கால நகைகள் வைக்­கப்­பட்­டி­ருந்த அறைக்குள் இருந்த நகை பெட்டி ஒன்றை கொள்­ளை­ய­டித்து சென்­றுள்­ளனர். அந்த நகை பெட்­டியில் 18ஆம் நூற்­றாண்டை சேர்ந்த வைரங்கள், மாணிக்­கங்கள் உட்­பட விலை­ம­திக்க முடி­யாத நகைகள் ஏரா­ள­மாக இருந்­த­தாக அருங்­காட்­சி­யக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். அருங்­காட்­சி­ய­கத்தில் உள்ள கண்­கா­ணிப்பு கெம­ராவில் கொள்­ளை­யர்­களின் உருவம் பதி­வாகி இருப்­ப­தா­கவும், அதை அடிப்படையாக கொண்டு அவர்களை வலைவீசி தேடி வருவதாகவும் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.