Take a fresh look at your lifestyle.

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் உள்ள அமடிக்னக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியதாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை எனவும் இதன்காரணமாக சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை என்றும் பசிபிக் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அலஸ்காவில் கடந்த நவம்பர் மாதம் அலூட்டியன் மற்றும் அன்ட்ரியானோஃப் தீவுப் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.3 ஆகப் பதிவாகியது. இந்நிலையில் மீண்டும் அலஸ்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018 நவம்பர் மாதம் அலஸ்காவில் 7.0 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு வீதிகள் மற்றும் பாலங்கள் கடும் சேதத்துக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.