சேலம் எட்டுவழிச் சாலைத்திட்டம் தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

breaking
சேலம் எட்டுவழிச் சாலைத்திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை எட்டு வாரங்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனை எதிர்த்து எட்டுவழிச்சாலை திட்ட அதிகாரி ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கு நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.