நான்கு மாகா­ணங்­களில் கடும் மழை தொடரும் !: காலி, களுத்­து­றையில் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

breaking
வடக்கு, கிழக்கு , ஊவா மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் கடும் மழை­யு­ட­னான கால­நிலை தொடரும் என்று வளி­மண்­ட­லவியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இவ்­வாறு தொடர்ச்­சி­யாக மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களில் காலி மற்றும் களுத்­துறை மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு ஏற்­படக் கூடும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மழை, வெள்ளம், மண்­ச­ரிவு போன்ற அனர்த்­தங்­களால் 1607 குடும்­பங்­களைச் சேர்ந்த 5904 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நான்கு மாகா­ணங்­களில் மழை அதி­க­ரிக்கும் வடக்கு, கிழக்கு , ஊவா மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் நாளையும் நாளை மறு­தி­னமும் 100 மில்லி மீற்­றரை விட அதிக மழை வீழ்ச்சி பதி­வாகக் கூடும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இதனால் குறித்த மாகா­ணங்­களில் வாழும் மக்கள் கடும் மழையால் ஏற்­படக் கூடிய அனர்த்­தங்­களில் இருந்து தம்மை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். மலைப்­பாங்­கான பிர­தே­சங்­களில் கடும் மழை எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தோடு, குறித்த பிர­தே­சங்­களில் மண்­ச­ரிவு ஏற்­படக் கூடிய வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே மண்­ச­ரிவு ஏற்­படக் கூடிய இடங்கள் இனங்­கா­ணப்­பட்டால் அங்­கி­ருந்து பாது­காப்­பான இடங்­க­ளுக்கு வெளி­யே­று­மாறும் மக்கள் கோரப்­பட்­டுள்­ளனர். இரு மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை கடந்த சில தினங்­க­ளாக தொடர்ச்­சி­யாக பெய்யும் மழை கார­ண­மாக மண்­ச­ரிவு ஏற்­படக் கூடிய வாய்ப்­புக்கள் அதிகம் காணப்­ப­டு­வ­தாகத் தெரி­வித்து களுத்­துறை மற்றும் காலி ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வ­னத்­தினால் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. களுத்­து­றையில் புளத்­சிங்­கள, வலல்­ல­விட்ட, மத்­து­கம மற்றும் அக­ல­வத்தை ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கும், காலி மாவட்­டத்தில் எல்­பிட்­டிய, நாகொட, இம­துவ மற்றும் பத்­தே­கம ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கும் மண் சரிவு தொடர்பில் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறு அறி­வ­லிக்­கப்­பட்­டுள்­ளது. பாதிப்­புக்கள் மழை , வெள்ளம் , மின்னல் தாக்கம் மற்றும் மண்­ச­ரிவு உள்­ளிட்ட அனர்த்­தங்­கங்­களால் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்கை 5000 ஐ விட அதி­க­ரித்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. மட்­டக்­க­ளப்பு மட்­டக்­க­ளப்பில் வெள்ளம் மற்றும் மின்னல் தாக்­கத்­தினால் கோர­ளைப்­பற்று , கோர­ளைப்­பற்று தெற்கு , மண்­முனை மேற்கு , மண்­முனை வடக்கு, காத்­தான்­குடி மற்றும் மண்னை பற்று ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­களில் 1050 குடும்­பங்­களைச் சேர்ந்த 3765 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இம்­மா­வட்­டத்தில் 4 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­தோடு, 51 குடும்­பங்­களைச் சேர்ந்த 185 பேர் இரு பாது­காப்பு முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். பதுளை பதுளை மாவட்­டத்தில் கடந்த இரு தினங்­களில் ( நவம்பர் 30, டிசம்பர் 1ஆம் திக­தி­களில் ) மாத்­திரம் கடும் மழையால் 193 குடும்­பங்­களைச் சேர்ந்த 819 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். ஹல்­து­முல்லை, லனு­கல, வெலி­மட, பசறை, ஊவா­ப­ர­ன­கம, எல்ல, பண்­டா­ர­வளை, ஹாலி­எல மற்றும் பதுளை ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட மக்­களே இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இம்­மா­வட்­டத்தில் அனர்த்­தத்தால் மூவர் காய­ம­டைந்­துள்­ள­தோடு, இரு குடி­யி­ருப்­புக்கள் முழு­மை­யா­கவும், 93 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன. அத்­தோடு பாதிக்­கப்­பட்ட 76 குடும்­பங்­களைச் சேர்ந்த 320 பேர் 3 பாது­காப்­பான முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். நுவ­ரெ­லியா நுர­ரெ­லியா மாவட்­டத்தில் வெள்ளம், மண்­ச­ரிவு, மரம் முறிந்து விழுந்­தமை என்­ப­வற்றால் நுவ­ரெ­லியா, வலப்­பனை, ஹங்­கு­ராங்­கெத்த மற்றும் அம்­ப­க­முவ ஆகிய பிர­தே­சங்­களில் 115 குடும்­பங்­களைச் சேர்ந்த 457 பேர் பாதிக்­கப்­பட்­டுள்ளர். இங்கு மண்­ச­ரிவில் சிக்கி நால்வர் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு குடி­யி­ருப்­பொன்று முழு­மை­யா­கவும், 8 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன. அத்­தோடு பாதிக்­கப்­பட்ட 74 குடும்­பங்­களைச் சேர்ந்த 279 பேர் 6 பாது­காப்­பான முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். மன்னார் மன்னார் மாவட்­டத்தில் நானாட்டான் பிர­தே­சத்தில் கடும் மழையால் 132 குடும்­பங்­களைச் சேர்ந்த 420 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, 5 குடும்­பங்­களைச் சேர்ந்த 15 பேர் இரு பாது­காப்பு முகா­மொன்றில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். மொன­ரா­கலை மொன­ரா­கலை மாவட்­டத்தில் பிபில, மெத­கம, சியம்­ப­லாந்­துவ, மொன­ரா­கலை, புத்­தள மற்றும் கதிர்­காமம் ஆகிய ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட 34 குடும்­பங்­களைச் சேர்ந்த 114 பேர் கடும் மழை மற்றும் மண் சரி­வினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இங்கு 30 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­தோடு, 20 குடும்­பங்­களைச் சேர்ந்த 54 பேர் பாது­காப்பு முகா­மொன்றில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். அம்­பாறை அம்­பா­றையில் காரை­தீவு பிர­தே­சத்தில் கடும் மழையால் 37 குடும்­பங்­களைச் சேர்ந்த 144 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, 10 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன. கேகாலை கேகாலை மாவட்­டத்தில் மரம் முறிந்து வீழ்ந்­தமை, மின்­சாரம் தாக்­கி­யமை மற்றும் கடும் மழையால் கேகாலை, கலி­க­முவ, ருவன்­வெல்ல, அர­நா­யக்க மற்றும் வர­காப்­பொல ஆகிய பிர­தே­சங்­களைச் சேர்ந்த 22 குடும்­பங்­களைச் சேர்ந்த 88 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இம் மாவட்­டத்தில் 15 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன. கண்டி கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பததும்பர, உடுதும்பர மற்றும் கலகெதர ஆகிய பிரதேசங்களில் கடும் மழையால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் இங்கு 9 குடியிருப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மாத்தளை மாத்தளை மாவட்டத்தில் ரத்தோட்ட பிரதேசத்தில் கடும் மழையால் 15 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பு முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முல்லைதீவு முல்லைதீவு மாவட்டத்தில் வெள்ள அனர்தத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்