அனர்த்தத்தை தவிர்ப்பதற்காக வெட்டிவிடப்பட்ட முறிகண்டிக்குளம்

breaking
உடைபெடுக்கும் நிலையிலிருந்த முறிகண்டி குளம் வெட்டிவிடப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள குளம் கடந்த சில நாட்களாக பெய்த கடும மழை காரணமாக நிரம்பி அணைக்கட்டை மேவி பாயும் நிலையிருந்த போது ஊடகவியலாளர் ஒருவரினால் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று(04) அணைக்கட்டின் ஒரிடத்தி்ல் வெட்டப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இக்குளமானது நீர் தேங்கி மேலதிக நீர் வெளியேறுகின்ற போது அது பொன்னகர், கனகாம்பிகைகுளம், ஆனந்தபுரம், இரத்தினபுரம், பரந்தன், சிவபுரம் பிரதேசங்களை கடந்து செல்லும். இதனால் இப்பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் பாதிக்கப்படுவர். எனவே இந் நிலைமையினை கருத்தில் எடுத்து கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மேற்படி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.