இனப்படுகொலையாளிக்கு ஒத்துழைப்பு செய்யும் இத்தாலி.?

breaking
புதிய நோக்குடன் முன்னோக்கி பயணிக்கும் இலங்கையுடன் பரந்த ஒத்துழைப்புடன் செயற்பட தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இத்தாலி தூதுவர் ரீட்டா ஜி.மெனல்லா தெரிவித்தார். இலங்கைக்கான இத்தாலி தூதுவர் ரீட்டா ஜி.மெனல்லா நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இத்தாலி அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கும் முகமாகவே இத்தாலி நாட்டின் தூதுவர் ரீட்டா ஜி.மெனல்லா ஜனாதிபதியை சந்தித்தார். கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய வேலைத்திட்டத்துடன் பொருளாதாரம், சமூகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கை துரிதமாக முன்னோக்கிப் பயணிக்கும் என இதன்போது நம்பிக்கை வெளியிட்ட தூதுவர், அவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார். அத்தோடு, இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரைனி ஜொரன்லி எஸ்கேடல் உள்ளிட்ட தூதுக் குழுவினரும் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர். நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, புதிய நோக்குடனும் வலுவான பின்னணியுடனும் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு தமது அரசாங்கம் உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத் தரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.