ஜெயசிக்குறு நடவடிக்கை, கள வெற்றிகள் முடிவு பற்றிய சிறப்பு பார்வை.!

breaking
ஜெயசிக்குறுய் எதிர்ச்சமர் அனைத்து இராணுவ வளங்களையும் ஒருமுகப்படுத்தி பெரும் நம்பிக்கையுடன்  சிங்களம் தொடுத்த  பாரிய இராணுவ நடவடிக்கைகான ஜெயசிக்குறுய்  இராணுவ நடவடிக்கை    அன்று கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ஆக்கிரமிக்கப்பட்ட யாழ் குடாநாட்டுக்கு  தரைப்பாதை அமைக்க  அன்று ஆரம்பிக்கப்பட்ட இப்பாரிய படையெடுப்பு  தமிழீழ விடுதலைப் புலிகளின் புயலையொத்த எதிர்த் தாக்குதலால் நிலைகுலைந்தது சிங்கள படைக்கு பலத்த இழப்பையும்  வரலாற்றில் பெருத்த அவமானத்தையும் தேடி தந்த ஜெயசிக்குறுய்எதிர்ச்சமர்  
  கட்டடக்கவசங்களையும்குறுக்கும்நெடுக்குமாணகுச்சொழுங்கைப்பாதைகளையும்கொண்ட யாழ்ப்பாணச் சமர் க்களத்தைப் போலல்லாதுகவசங்களற்ற நிலப்பரப்பையும் – ஒரு சிலபாதைகள் கள் என்றில்லாமல் எதையுமே பாதையாக்கக் கூடிய தரை அமைப்பையும் வன்னிச் சமர்க்களம் தனித்துவமானது. சாதகங்களையும் பாதகங்களை யும் ஒருங்கே கொண்ட வித்தியசமான மரபுப்போர் அரங்கம் இது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற உதவிய அதே மரபுப் போர்ப்பலம் , வவு – கிளிநொச் பாதையைக் கைப்பற்றவும் சட்டாயம் உதவும் என்று படைத்தளபதிகள் கணித்திருந்தனர்
பாதை இருமருங்கும் ராங்க்குகள் குண்டுகளைப் பொழிந்தபடி முன்னேற – பின்புலத்திலிருந்து ஆரில்லறிகள் எறிகணைகளை அள்ளி இறைக்க மோட்டர் குண்டுகள் விழுந்துவெடிக்க இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து புலிகளையும் அவர்களது நிலைகளையும் உடைத்தெறிய உடைந்த நிலைகளை நோக் கி நகரும் படையினரின் துப்பாக்கிகள் சண்டைகளுக்கு முற்றுப் புள்ளிவைக்க யாழ்ப்பாணச் சமரைப் போலவே ஜயசிக்குறுயும் வெற்றியில் முடியும் என்று சிங்களத் தளபதிகள் எதிர்பார்க்கின்றனர்
சரியாக ஒருவருடத்திற்கு முன் நடாத்தப்பட்ட சத்ஜய = உண்மையில் – ஆனையிறவு-வவுனியா பாதை திறப்பி என்.ஆரம்பமுயற்சியாகும். முல்லைத் தீவில் படையினரின் தோல்வியை ஈடுகட்ட அவசரமாகச் செய்யப்பட்ட நடவடிக்கை அது என்றாலும், அதைத் தொடர விடாமல் சில இராணு வக்காரணிகள் தடையாக இருந்துவிட்ட ன
ஆனையிறவுத் தளத்தைப் பின்தளமாகக் கொண்டு நடாத்தப்பட்ட சத்கஜய’. சமரின் போது சிங்களப்படைகள்   தமது விநியோகம் மற்றும் மருத்துவ விடயங்களில் பாரிய சிரமங்களைச் சந்த்த ன. குறிப்பாக, காயம் அடையும் படையினரை தென்பகுதி வைத்தியசாலைகளுக்கு கொண்டு செலவதிலும் – புதிய படைப்பிரிவுகளை தென்பகுதியிலிருந்து கொண்டு வருவதிலும் படைத்தலைமை படாதபாடுபட்டது. சிங்களக் கடற்படையும் – வான்படையும் அந்தப்பின்கள உதவிகளை (LOGISTICAL SUPPORT) தொடராக வழங்கக்கூடிய வகையில் இன்றில்லை  எனவே இம்முறை சமரின் பின்களமாக வவுனியாவை படைத்தலைமை தேர்வு செய்தது அங்கிருந்து “வெற்றி உறுதி ‘மைய ஆரம்பித்தது  இதுவரை நடந்து முடிந்துள்வ நடவடிக்கையை மூன்று கட்டங்களாக வகுத்துப்பார்க்கலாம் முதலாம் கட்டம் , ஓமந்தையை நெடுங்கேனியைக் கைப்பற்றல். இரண்டாம் கட்டம, ஓமந்தையிலிருந்து ரம்பைக்குளத்தைப் பிடித்து விளக்கு வைத்தகுளத்திற்கு முன்மேல் மூன்றாம கட்டம் விளக்குவைத்த குளத்திலிருந்து பன்றிக்கெய்த குளத்தைப் பிடித்தது பனிக்க நீராவி ஊடாக புளியங்குளத்தை நோக்கி முன்னேறல் இதேவேளை ஜயசிக்குறுய் படை நிலைகள் மீது புலிகள் இரண்டு பரிய தாக்குதலகளையும தொடுத்துள்ளனர். ‘ஆகவே, இதுவரை ஜயசிக்குறுயில என்ன நடந்துள்ளது என்பதை ஐந்துட்டங்களாக இங்கே பார்ப்போம்
முதலாம் கட்ட சண்டை 
சாதாரண மரபுப் போர்த் தந்திரத்தையே ஜயசிக்குறுய் படைகளும்  தமது நகர்வுத்தந்திரமாகப் பயன்படுத்த துப்பாக்கி வீச்செல்லைகளுக்கு அப்பால் இருந்தவாறு புலிகளின் நிலைகளை நோக்கி சரமாரியான குண்டுத் தாக்குதல்களை செய்து – நிலைகளைச் சின்னாபின்னப்படுத்திவிட்டு – ராங்க்குகள் – கவசவாகனங்களின் துணையுடன்படையினரை  அனுப்பி நிலைகளைக் கைப் பற்றுவதே அந்த  நகர்வுத் தந்திரமாகும். அதேவேளை இவ் விதம் மெதுமைப்படுத்தப்பட்ட இலக்குகளை நோக்கி சந்தடி யற்ற நகர்வுகளையும் படையினர் தமக்கு வாய்ப்பான முனைகளில்  பயன்படுத்த முனைந்தனர்
13-05-97 அன்று ஜயசிக்குறுய் படைகள் இரு களங்களைத் திறந்தன. நொச்சி மோட்டப் பகுதி யூடாக ஓமந்தை நோக்கிய ஒரு களத்தையும், டொலர் கென் பண்ணைப்  பகுதிகளில் இருந்து நெடுங்கேணி நோக்கிய மற்றொரு   களத்தையும்  படையினர்  திறந்தனர் நாள் சண்டை , படையினரின், எறிகணை விதைப்பிலே பெரும்பாலும் கழிந்தது இரண்டாம் மூன்றாம் ; நாட்களில் சண்டைகள் தீவிரமடைந்தன. ஓமந்தை முனையில், மூன்றாம் நாள் (16-05-97 ) இரண்டு ராங்க்குகள் அழிக்கப் பட்டன. ஓமந்தையைக் கைப்பற்ற பெருமுனைப்புடன் முன்னேறுவதும்  முடியாமல பின்வாங்குவதுமாக இழுபட்டது ஓமந்தை வீழ்ச்சி காணாத நிலையிலேயே அதைக் கைப்பற்றிவிட்டதாக அரசு அறிவித்தது சண்டையின் ஒரு அத்தி த்தை மூன்று நான்கு நாட்களுக்குள் முடித்து ஒரு வெற்றிச் செய்தியை சிங்கள மக்களுக்கு வழங்கவிரும்பிய அரசின் ஆசை ஈடேற, உண்மையில், இரண்டு வாரங்கள் சென்றன. ஓமந்தையையும், நெடுண்கேணியையும் கைப்பற்றிப் பலப்படுத்த நடந்த இந்த இருவாரச் சண்டையில் 125 ற்கும் மேற்பட்ட துருப்புக்கள் கொல்லப்பட்டிருந்தனர்  . 500 ற்கும் மேற்பட்டோர் காயப்பட்டிருந்தனர். அத்துடன் 4 ராங்க்குகள் அழிக்கப்பட்டன. மேலும் இரண்டு ராங்க்குகள் சேதமாக்கப்பட்டதால், அவை , களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. * புலிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை படையினர் சந்தித்துள்ளன என பிரிகேடியர் தரத்தைக்கொண்டஒரு படை உயர்அதிகாரி தெரிவித்திருந்தார் .
புலிகள் ஏவிய எறிகணைகள் கொடுத்த தாக்கம்தான் இந்த சண்டைப்பரிமாண உயர்ச்சிக்குப் பிரதான காரணமாகும் முதல்முறையாக, சரமாரியான எறிகணை வெடிப்பிற்குள் புலிகளுடன் சண்டையிடவேண்டிய நெருக்கடிநிலை படையினர்க்கு எழுந்தது இதனால் , காயப்படும் படையினரின் விகிதம்  திடீரென உயர்ந்தது. ஒவ்வொருநாள் சண்டை முடிவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படை யினைரைக் களத்தைவிட்டு வெளியேற்றவேண்டிய நிலை படைத்தலைமைக்கு ஏற்பட்டது இது படையினரின் வேகநகர்வைப் பெரிதும் பாதித்தது ஜயசிக்குறுயின் மந்தமான  நகர்விற்கு பிரதான் காரணம் இதுவேயாகும் .
இரண்டாம் கட்டச் சண்டைடை .
இதுவரைகாலமும் படைநடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்தது போலல்லாது  வெற்றி உறுதி”யை புலிகள், வித்தியாசமானமுறையில் எதிர்கொண்டனர். முல்லைத்தளம மற்றும் புளுகுணாவி முகாம் தகாபபுகளால கைப்பற்றபட்ட ஆட்லறிகள் மற்றும் மோட்டர்பீரங்கிகள் என்பன ஒரு குறித்தளவு மரபுப் போர்ப்பலத்தை புலிகள் இயகத்திற்குக் கொடுத்தன. இதனால் ஜயசிக்குறுய் சண்டைகள் விததயாசமன பரிமாணத்தில் நடக்கின்றன
24.05. 97 அன்று, இரண்டாம் கட்டமாக ரம்பைக்குளம் பகுதியைக் கைபற்றும் சண்டை உக்கிரம்  பெற்றது. அன்றையதினம இரு  ரங்ககுகளும் ஒரு  கவசத துருப்புக்காவியும அழிகப் படடன. 25ற்கும மேற்பட்ட படையினரும பலியாகினர்
புலிகள்  ஏவும் எறிகணைகளும் கவச எதிர்பபு ஆயுதங்களும் ஜயசிக்குறுய் படையின் போர்வலுவைப் பெரிதும் பாதித்தன  ஆள் இழப்புகளும் – ராங்க்.இழப்புகளும் தொடர்ச்சியான  நகர்விற்குச் சவாலாக எழுந்தன. இதனால , நகர்வுகளைச் சில நாட்களுக்கு  நிறுத்த வேண்டிய நிர்பந்தம் படைத் தலைமைக்கு எழுந்தது .இவ்விதம் , சுமார்10 நாட்கள் நகர்வுக்கான சண்டைகள இல்லது வெறும்  எறிகனை  தாக்குதல் களுடன் கழிநதது.
3. 6. 97 அன்று மீண்டும் ஓமந்த முனை யலி ருந்து நகர்விற்கான சண்டையை படையினர்  ஆரம்பித்தனர் . அடுத்தி ஒரு சில நாட்கள . அடுத்து இருந்த விளக்கு வைத்த  குளம சந்திக்கு  அண்மை வரை   படையினர் நகர்ந் தனர். அங்கிருதது 6. 6. 97 – அன்று  பனி க்க நீராவி  நோககி ஒரு திடீர் நகர்வை இராணுவம் செய்தது.அது புலி வீரரின் கடுமையான எதிர்ப்பிற்கு இலக்கானது .இந்த சண்டையில் 20 படையினர் வரை பலியாகியிருந்தனர் .40 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் ,பெரியமடுப் பகுதியை கைப்பற்றிவிட்டதாக  சிங்கள அரசு , பெரிய வெற்றிப் பிரச்சாரம் செய்தது.
   
வவு – கிளிநொச்சி பாதை அழைப்பதுபற்றி, ஜெனரல் றத்வத்த இந்தக்கட்டத்தி மீண்டும் வலியுறுத்தி அறிக்கை விடுத்தார் : அடுத்ததாக புளியங்குளத்தைக் கைப்பற்றப் போவதாக படைத்தலைமை சூளுரைத்தது. புளியங்குளத்தைக் கைப்பற்றி, அதை ஒரு வெற்றி விழா வாகக் கொண்டாடி, ஜயசிக்குறுயின் முதலாம் அத்தியாயத்தை பூர்த்திசெய்யும் ஆவலில் படைத்தலைமை இருந்தது. ஏனெனில் ஆரம்பிக்கப்பட்ட போது , இருந்ததைப்போலல்லாது. ஜயசிக்குறுய் அலை சிங்கள தேசத்தில் தணிந்துகொண்டு சென்றதால் அதை மீண்டும் உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கவேண்டிய அவசியம் அரசிற்கு எழுந்தது
நொச்சிமோட்டை – தாண்டிக்குளம் தாக்குதல்.!
தாக்குதல் புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்தவளை, படை யினருக்கு ஒரு பேரிடி தாணடிக்குளத்தில் விழுந்தது.
10. 06. 97  அன்று  தாண்டிக்குளம் நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை, புலிவீரர்கள், நிகழ்த்தினார். ஆக்கிரமிக்கப்பட்ட பாதைப்பகுதிமீது புலிகள் தாக்குவர் என்பதை படை யினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்கு தலுக்காக புலிகள் தேர்வு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  ஓமந்தையையும் அதற்கு வடக்காகவும் புலிகளின் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே அடி விழுந்தது அதிர்ச்சியூட்டும் தாக்குதலாய் அமைந்துவிட்டது.
மூன்றாம் கட்ட சண்டை :
தாடிக்குலம் தாக்குதல் ஜயசிக்குறுய் படைகளை சுமார் இரண்டு வாரமாக   நின்ற இடத்திலேயே முடக்கி வைத்திருந்தது ,அழிக்கப்பட்ட வெடிப்பொருள் வளங்கள் மீளப்பெறவும் புதியவர்களை வர வழைக்கவும்  தாக்கதல்களுக்குளான் பகுதிகளை பலப்படுத்தவும் இந்த இரண்டு வாரங்கள் படையினர் பயன்படுத்தினர்
22.06.97அன்று பனிக்க நீரானப் பகுதியில்  இருந்த நகர்வை ஆரம்பிக்க முயன்றனர் ,இந்த படை முயற்சியைப் புலிகளின் பெண்கள் படையணி  எதிர்கொண்டது ,
சண்டையில் ராங்க் ஒன்றை பெண்புலிகள் தகர்த்தழித்தனர் . மேலும் இரு ராங்குக்களை கடுமையாக சேதமாக்கினர்  ,அதில் 15 படையினர் பலியாகினர் ,இரண்டு நாட்கள் மட்டும் நடந்த மூன்றாம் கட்ட சண்டையை புலிகளின் பாரிய தாக்குதல் இடைநிறுத்தியது பன்றிக்கெய்த குளம் -பனிக்க நீராவித் தாக்குதல்: தாண்டிக்குளத்தில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு சரியாக 14 நாட்களின் பின் கிட்டத்தட்ட அதே தாக்குதல்  பரிமாணத்துடன்   முன்னணிப்  ப குதி மீது புலிகள தாக்கினர் .படையினர்  பீரங்கிப் படைப்பிரிவு  அமைந்திருந்த பகுதி தாக்குதலின் பிரதான இலக்காகியது .60  நாட்களுக்கும் மேற்பட்ட ஜயசிக்குறுய் சண்டையில் இதுவரை படைத்தரப்பு சந்தித்த ஆள்- ஆயுத இழப்பு என்பன சாதாரண தொகையில் அமைந்திருக்கவில்லை ,இதே போல்  ஜயசிக்குறுய் படைகள் மேலும் இழப்புகளையும் அழிவுகளையும் சந்திக்கும்  எனபது திண்ணம் தகவல்:விடுதலை புலிகள் இதழ்   இணைய வெளியீடு :வேர்கள் இணையம்