‘உத்தியோகபூர்வ வீடு, வாகனங்களை திருப்பி ஒப்படைக்காத கடந்த அரசின் அமைச்சர்கள்!

breaking
கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் இருவரை தவிர வேறு யாரும் தமது உத்தியோகபூர்வ வீடுகளை திரும்ப ஒப்படைக்கவில்லையென்ற தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரஞ்சித் மத்துவ பண்டார ஆகி இருவருமே வாகனம், வீட்டை ஒப்படைத்துள்ளனர். கடந்த அரசில் அங்கம் வகித்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் யாருமே வீடுகளை திரும்ப ஒப்படைக்கவில்லை என்று பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம், அமைச்சரவை இரத்து செய்யப்பட்டது. அதன்படி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்று, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டார். கடந்த அரசின் அமைச்சர்கள் வீடுகளை ஒப்படைக்காததால், புதிய அமைச்சர்களிற்கு உத்தியோகபூர்வ குடியிருப்புக்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதேவேளை, பல முன்னாள் அமைச்சர்கள் தங்கள் உத்தியோகபூர்வ வாகனங்களையும் ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.