இலங்கையில் தமிழீழம் உருவாகுமா? பிரிட்டனில் இருந்து வந்த பதிலடி!

breaking
இலங்கை இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் கொன்சர்வேட்டிவ் கட்சியின் விஞ்ஞாபனத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என அக்கட்சியின் பிரதி தலைவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் கொன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது பாரிய அச்சுறுத்தலாகும் என தெரிவித்திருந்தநிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கொன்சர்வேட்டிவ் கட்சி பிரதி தலைவர், ‘இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என கொன்சர்வேட்டிவ் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்படவில்லை. நல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதியை அடைவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். இரு மாநிலம் தொடர்பான கூற்று மத்திய கிழக்கு நாடுகளுடன் மட்டுமே தொடர்புடையது என பதிவிட்டுள்ளார். “பிரிட்டனில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சி வெற்றிபெற்றால் இலங்கையில் தமிழீழம் மலர்வதற்கான சாத்தியம் உள்ளதென” பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.