Take a fresh look at your lifestyle.

ஒவ்வொரு மாதமும் 1 மில்லியன் சிற்றுண்டி செலவு: யாழ் மாநகரசபைக்கே ‘டஃப்’ கொடுக்கும் கொழும்பு மாநகரசபை!

 

கொழும்பு மாநகரசபையின் கடந்த 16 மாத அமர்வுகளின் போது உணவு மற்றும் பானங்களிற்காக 17 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மாநகரசபையின் ஜேவிபி உறுப்பினர் ஹேமந்த வீரக்கோன்.

மாநகரசபை நிதியிலிருந்து ஒவ்வொரு மாதாந்த கூட்டத்திற்காகவும் 1 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இவை களியாட்ட செலவுகள் என்றும் குற்றம்சாட்டினார்.

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொழும்பு மாநகரசபை அமர்வுகள் தொடங்கியதில் இருந்து, உணவு மற்றும் பானங்களில் ஜேவிபியின் ஆறு உறுப்பினர்களும் பங்குகொள்ளவில்லையென்றும் குறிப்பிட்டார்.

யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட்டும் ஆடம்பர செலவுகளில் ஈடுபடுகிறார் என சபைக்கு உள்ளேயும் வெளியேயும் விமர்சனங்கள் வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.