முல்லைத்தீவு தற்போதைய அனர்த்த நிலை (படங்கள் இணைப்பு ).!

breaking
வட தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (5) இரவு முதல் இன்று (06) அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக கிராமங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இதன் காரணமாக பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பண்டாரவன்னியன் கிராமம், பேராறு, முத்தையன்கட்டு போன்ற கிராமங்களும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் இருட்டுமடு, சுதந்திரபுரம், உடையார்கட்டு வள்ளிபுனம், தேவிபுரம், தேராவில், மூங்கிலாறு, மன்னா கண்டல் போன்ற கிராமங்களும் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் பல கிராமங்களும் வெளிச் செயலர் பிரிவில் பல கிராமங்களும் நீரினால் மூழ்கியுள்ளன. இந்த வெள்ள அனர்த்தத்தின் காரணமாக இந்த கிராமங்களில் இருந்த மக்கள் பொது இடங்களிலும் பாடசாலைகளிலும் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர்.
இவர்களுக்கான சமைத்த உணவுகளை அந்தந்த பிரதேச செயலர் பிரிவு பிரதேச செயலகங்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் மீட்புப் பணிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் மற்றும் பிரதேச இளைஞர்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிர் சேதங்கள் எவையும் இடம் பெற்றிருந்த போதிலும் மிகப் பாரிய சொத்து அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
விவசாய நிலங்கள் கால்நடைகள் என்பனவும் இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக அழிவடைந்துள்ளன.