விண்வெளியில் ’ரோபோ ஹோட்டல்’ ஆரம்பிக்கும் நாசா..!

breaking
விண்வெளியில் புதிதாக ‘ரோபோ ஹோட்டல்’ தொடங்க சர்வதேச விண்வெளி மையமான நாசா முடிவு செய்துள்ளது. ரோபோ டூல்ஸ்-களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒரு பாதுகாப்புமிக்க சேமிப்பு அலமாரியை ஏற்படுத்த உள்ளது. விண்வெளியில் அமைய உள்ள இந்த அலமாரி உடன் ஒரு ‘ரோபோ ஹோட்டலும்’ இணைக்கப்பட உள்ளது. இந்த ஹோட்டலில் முதலாவதாக இரண்டு ரோபோக்கள் தங்க வைக்கப்பட உள்ளன. இந்த இரண்டு ரோபோக்களும் விண்வெளி மையத்தில் ஏதேனும் லீக் ஏற்படுகிறதா என்பதைத் தொடர்ந்து ஆராயும். குறிப்பாக அமோனியா வாயு வெளியேற்றத்தை அறிந்து அதை சரிசெய்ய இந்த ரோபோக்கள் உதவும். 2015-ம் ஆண்டு இந்தப் பிரச்னைக்காக முதன்முதலில் ஒரு ரோபோ உருவாக்கப்பட்டது. இதற்குத் துணையாகத்தான் இந்தாண்டு லீக் ஏற்படுவதைக் கண்டுபிடிக்க மற்றொரு ரோபோவும் சர்வதேச விண்வெளி மையம் அருகே உள்ள ரோபோ ஹோட்டலுக்குக் கொண்டு வரப்படுகிறது. பாதுகாக்கப்படும் ரோபோ டூல்ஸ்களை கதிர்வீச்சு, எரிகற்கள், விண்வெளியில் உலவும் சிறு மற்றும் பெறு துகள்கள் ஆகியவற்றில்லிருந்து பாதுகாக்க இந்த இரண்டு ரோபோக்கள் ‘ரோபோ ஹோட்டலில்’ தங்கி பணியாற்றும்.