251 பதக்கங்களை அள்ளி பெருமை சேர்த்த இலங்கை அணி நாடு திரும்பியது!

breaking
  தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்து பெருமை சேர்த்த இலங்கை அணியானது நேற்றிரவு தாயகம் திரும்பியுள்ளது. 13 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா கோலா­க­லமா நேற்று நேபாளத்தின் காத்­மண்டு நகரில் கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகி 10 ஆம் திகதி வரை நடைபெற்று வந்தது. காத்­மண்டு மற்றும் பொக்­காரா ஆகிய இரண்டு நகரங்­களில் நடைபெற்ற இப் போட்டித் தொடரில் இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஸ், மாலைதீவுகள், பூட்டான் மற்றும் தொடரை நடத்தும் நேபாளம் ஆகிய ஏழு நாடுகள் பங்கு கொண்டன. நேற்று முன்தினத்துடன் நிறைவுக்கு வந்த இப் போட்டித் தொடரில் இலங்கை அணி 40 தங்கப் பதக்கங்களையும், 83 வெள்ளிப் பதக்கங்களையும், 128 வெண்கலப் பதக்கத்தையும் உள்ளடங்களாக மொத்தம் 251 பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டது. இந்திய அணி 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் உள்ளடங்கலாக மொத்தமாக 312 பதக்கங்களை பெற்று முதல் இடத்தையும், நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெள்ளி உள்ளடங்கலாக மொத்தமாக 206 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தது.