வவுனியா வடக்கு பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தோல்வி!

breaking
வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 10 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. தவிசாளர் சபாரத்னம் தணிகாசலம் முன்வைத்த வரவு செலது திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்காமல் சுயாதீனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா வடக்கு பிரதேசசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.