வெளிநாட்டு கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பரிசோதணை செய்வதற்கு உரிய வசதிகள் இல்லை

breaking
கொழும்பு துறைமுகம் களஞ்சியசாலை பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பரிசோதணை செய்வதற்கு உரிய வசதிகள் இல்லை என அரச இராசாயண பகுப்பாய்வாளர் நீதிமன்றத்திற்கு அறிக்கை வழங்கியுள்ளது. வெளிநாடுகளின் கழிவு பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யவதை தடுக்குமாறு தெரிவித்து சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்தது. குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதியரசர்களான யசந்த கோதாகொட தலைமையிலான நீதியரசர் குழாம் முன்னிலையில் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டு கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் குறித்து எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை தீர்மானிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.