சிங்கள பேரினவாதம் வெளிநாட்டு தூதரகத்திற்கு பாதுகாப்பு கொடுக்காது.!

breaking
சிறிலங்காவில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலையில், தமது பிரஜை ஒருவர் சிறிலங்காவில் நடத்தப்படும் விதம் தொடர்பாக சுவிஸ் அரசாங்கம் இதுவரை காத்திரமான நடவடிக்கை எதையும் எடுக்காத நிலை தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். குறித்த பெண் தமிழர் என்பதால்தான் சுவிற்சர்லாந்து அரசும் அவரைக் கைவிட்டுள்ளதா எனவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை எவ்வாறு நடத்தவேண்டும் என நடைமுறைகள் இருக்கின்றன. அந்த விதிகளை சிறிலங்கா அரசு மீறியுள்ளது. அந்தப் பெண் அதிகாரி மீது குற்றச்சாட்டு இருந்திருந்தால் உரிய முறையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டிருக்க முடியும். அதை விடுத்து, வீதியில் வைத்துக் கடத்திச் சென்று விசாரணை நடத்தவேண்டிய அவசியம் இல்லை. ஒரு வெளிநாட்டுப் பிரஜைக்கு - அதுவும் ஜனநாயகம் உள்ள நாட்டின் பிரஜைக்கு - பாதுகாப்பு இல்லாத சிறிலங்காவில் சாதாரண மக்கள் எப்படி வாழ முடியும் என்பதை சுவிற்சர்லாந்து சிந்திக்கவேண்டும். சிறிலங்கா மனிதக் கடத்தலுக்கு பெயர்போன நாடு என்பது வெளிநாட்டுப் பிரஜையான குறித்த பெண் கடத்தல் மூலம் அம்பலமாகியிருக்கின்றது என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான அராஜகத்திற்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.