நியூஸிலாந்தின் வைட் தீவிலிருந்து ஆறு சடலங்கள் மீட்பு!

breaking
நியூசிலாந்தில் சுற்றுலா தளமான வைட் தீவில் அமைந்துள்ள எரிமலை, வெடிப்பில் சிக்குண்ட 6 பேரின் சடலங்களை மீட்புப் படையினர் இன்றைய தினம் மீட்டெடுத்துள்ளனர். இவ்வாறு மீட்க்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பதற்காக அங்கிருந்து கப்பல் மூலம் வெலிங்டனுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் காணாமல்போனோர் இருவரையும் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எரிமாலையானது மீண்டும் வெடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ள படையினர், மீட்பு பணிகளை முமமுரமாக ஆரம்பித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த எரிமலை வெடிப்பின்போது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 24 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 9 பேரும், நியூஸிலாந்தைச் சேர்ந்த 5 பேரும், ஜேர்மனியைச் சேர்ந்த 4 பேரும், சீனவைச் சேர்ந்த இருவரும், பிரிட்டனைச் சேர்ந்த இருவரும், மலேசியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்கலாக மொத்தம் வைட் தீவில் சுமார் 47 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.