முல்லைத்தீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு.!

breaking
அண்மை நாட்களாக   வட தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 38 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் மற்றும் நுளம்பு வலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையம் என்பன இணைந்து விதையனைத்தும் விருட்சமே செயற் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நிவாரணத்திற்காக உலர் உணவு பொதிகள் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் குறித்த கழகங்களை சேர்ந்த சுமார் 40க்கு மேற்பட்ட இளைஞர்கள் இரண்டு நாட்களாக யாழ் நகரப் பகுதிகள் எங்கும் சேகரித்த பொருட்களை கொண்டு ஒரு குடும்பத்திற்கு தலா 3 ஆயிரம் ரூபா பெறுமதியான 38 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் மற்றும் நுளம்பு வலைகள் என்பன இன்றைய தினம் (12)வழங்கி வைக்கப்பட்டது அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் 25 குடும்பங்களுக்கும் பனிக்கங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 08 குடும்பங்களுக்கும் பேராறு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களுக்குமாக மொத்தமாக  38 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நுளம்பு வலைகள் வழங்கிய வழங்கிவைக்கப்பட்டது இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு த. அகிலன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் இந்திரகுமார் ,ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு ப நிறைஞ்சன்  மற்றும் கிராம அலுவலர் திரு செந்தில்நாதன் இந்துபுரம் அபிவிருத்தி உத்தியோகத்தர் தர்மிளா ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி செ.சுஜிதரன் ,இளைஞர் கழகங்களின் உடைய தலைவர்கள் மற்றும் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையம் சார்ந்த அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைத்தனர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் குறித்த காலத்தில் இளைஞர்கள் அரசியலைத் தாண்டி இவ்வாறான சமூக சேவைகளுக்கு முன் வந்தமைக்காக நன்றி தெரிவிப்பதோடு இவர்களுடைய கழகங்கள் மென்மேலும் வளரவேண்டும் எனவும்  எதிர்காலத்திலும் இவ்வாறான சேவைகள் தொடர வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்தார்