சிறீலங்கா மீது சர்வதேச விசாரணை கோருவது அரசியலமைப்புக்கு முரணாகும் - மக்கள் விடுதலை முன்னணி

breaking
சிறீலங்கா மீது சர்வதேச விசாரணை கோருவது அரசியலமைப்புக்கு முரணாகும், சர்வதேச விசாரணை நடைபெற்றால் சர்வஜென வாக்கெடுப்புக்கு அது வழிகோலும், எனவே சிறிலங்காவின் அரசியல் அமைப்புக்கு ஏற்றவகையிலேயே அனைத்து விசாரணைகளும் நடைபெற வேண்டும். இவ்வாறு யாழ்ப்பாணத்தி தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமரா திசாநாயக்க. புதிய அரசாங்கத்தின் VATவரி அதிகரிப்பு தொடர்பில் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றைய தினம் துண்டுப்பிரசுர விநியோகம் நடைபெற்றது.  இதன் போது ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எமது நாட்டில் இருக்கும் அரசியல் அமைப்புக்கு ஏற்ற வெளிநாட்டு நீதிபதிகளுடனான ஒரு நீதிமன்றை அமைப்பதற்கு, இலங்கையில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டிய காரணம் ஏதும் இருக்குமானால், அதனை விசாரிக்க வேண்டியிருப்பது இலங்கையில் உள்ள சட்டமும் அரசியல் அமைப்பும் தான். இலங்கையின் அரசியல் அமைப்புக்கு முரணாக நடைபெறுமானால் கட்டாயமாக சர்வதேச வாக்கெடுப்பை நோக்கி செல்லும், எனவே இவ்வாறன சிக்கலான பிரச்சனைகளுக்காக நீதியை நிலை நாட்டுவதற்காக இருக்கின்ற யந்திரத்தை பயன்படுத்துவதே சரியான முறையாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இதேவேளை நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் வடக்கில் போட்டியிட்டவர்கள் இலங்கையில் நடைபெற்ற யுத்த குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை அவசியம் எனவும் உள்ளூர் நீதிபதிகாளால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.