புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய தகவல்

breaking
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் உடன்படிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கே. பாண்டியராஜன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விவாதத்தில் உரையாற்றிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு தரப்பில் கூறப்படுகின்றபோதும், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அரசு, இதுவரை ஆலோசனை நடத்தியதாக தெரியவில்லை என தெரிவித்தார். இதற்கு பதிலளித்துபேசிய அமைச்சர் பாண்டியராஜன், பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி முதலான நாடுகளை சேர்ந்த இந்திய வம்சாவழியினருக்கு இந்தியாவில் இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்காக, இந்திய அரசாங்கம் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. அதேபோன்று, இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் உடன்படிக்கை மேற்கொண்டால் மாத்திரமே இலங்கை தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமாகும் என்றார். இதேவேளை, குறித்த விவாதத்தில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தருவதாக கூறுகின்றவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது என தெரிவித்தார்