சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபயவின் வாக்குறுதியை நினைவுபடுத்திய இந்தியா!

breaking
சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிக்கமைய இந்தியப் படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் திணேஸ் குணவர்தன இந்தியா சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் அவருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இருநாட்டு உறவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தற்போது இந்திய கடற்றொழிலாளர்களின் 52 படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இதனை தவிர 15 கடற்றொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திணேஸ் குணவர்தனவிடம் பேசி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அளித்த உறுதிமொழிக்கு இணங்க இலங்கையின் பிடியில் உள்ள தமது நாட்டு கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்