மீண்டும் மீண்டும் சர்ச்சை எழுப்பும் பாஜக

breaking

காவி உடை வள்ளுவர் படத்தை கடந்த சில மாதங்களூக்கு முன்பு பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததால் சர்ச்சை வெடித்தது.  இதைக்கண்டித்து தொடர் போராட்டங்களும், கடும் விவாதங்களும் நடந்தது.

இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், மீண்டும் அந்த சர்ச்சயை எழுப்பினார் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு.  அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து, ’சிறந்த தமிழ் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது’என்று திருவள்ளுவரை புகழ்ந்திருந்தார்.

 

மீண்டும் காவி உடை திருவள்ளுவர் படத்திற்கு கண்டனங்கள் எழுந்ததால், காவி உடையுடன் இருந்த திருவள்ளுவர் படத்தை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார் வெங்கையா நாயுடு.

இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக பாஜக, அதன் டுவிட்டர் பக்கத்தில், ஒளவையார், திருவள்ளுவர், நரேந்திரமோடி ஆகிய மூவரும் காவி உடையில் இருப்பது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது.

பாஜக இப்படி காவியை வைத்து மீண்டும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.