25 ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்ட தடை!

breaking
கொழும்பு நகரில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை 25 ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விமான பயணத்திற்காக மாத்திரம் பதிவுசெய்யப்பட்ட வானூர்திகளை காலிமுகத்திடலில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் விளையாட்டுத் திடலில் தரையிறக்க முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த தடை விதிக்கப்பட்டிருந்த கடந்த 25 ஆண்டுகாலமாக இரத்மலானை மற்றும் பத்தரமுல்லையிலிருந்தே உள்நாட்டு விமான சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, தனியார் கெலிஹொப்டர்கள் இனி சுற்றுலா பயணிகளுக்காக கொழும்பில் இயங்கலாம் என்பதுடன் முதற்கட்டமாக உள்ளூரைச் சேர்ந்த விமான இயக்குநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருடத்திற்கு 20 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். இதன் காரணமாக சுற்றுலாத் துறையில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொருளாதாரத்தை அதன்மூலம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக இந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.