100 வருடங்களுக்குப் பின் இலங்கைக்கு வந்த புத்தர்சிலை!

breaking
சுமார் 100 வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த புத்தர் சிலை 1919ஆம் ஆண்டு பிரித்தானியர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்த போது அவரால் பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தது. பிரித்தானியாவில் பெல் (bell) குடும்பத்தினரிடமே இந்த சிலை இருந்துள்ளது. அந்த குடும்பம் தலைமுறை தலைமுறையாக இந்த சிலையை பாதுகாத்து வந்துள்ளனர். பின்னர் குறித்த சிலையில் வரலாற்றை அறிந்து இதை திருப்பி கொடுப்பதற்காக பெல் குடும்பத்தினர் இலங்கைக்கு வந்துள்ளனர். அதன்படி குறித்த சிலை நேற்று கண்டி தலதா மாளிகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 100 வருடங்களுக்குப்பின் இலங்கைக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட புத்தரை காண்பதற்கு மக்கள் படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.