வெளிநாட்டில் கோர விபத்து! இலங்கைப் பெண் ஒருவர் உள்ளிட்ட பலர் பலி

breaking
அபுதாபியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பெண் பயணித்த பஸ் வண்டியும், லொறி ஒன்றும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது. நேற்று (16) இடம்பெற்ற இவ்விபத்தில் இலங்கைப் பெண் உட்பட 06 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பஸ் சாரதி ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களில் ஏனையோர் பெண்களாவர். அத்தோடு குறித்த பஸ்ஸில் பயணித்த 19 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, அதில் இலங்கையர்களும் உகண்டாவைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர்.