இலங்கையில் புதிய வகை ஆபத்தான நுளம்பினம் கண்டுபிடிப்பு!

breaking
  இலங்கையில் நோயை பரப்பும் புதிய நுளம்பினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நுளம்பு கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புள் (Near inful) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இலங்கையில் பதிவாகியுள்ள ஆபத்தான புதிய நுளம்புகளின் எண்ணிக்கை 154 ஆகும். 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் இந்த நுளம்பை கண்டறிவதற்கு விசேட ஆய்வு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.