இலங்கையில் கடன் சுமைகளிலிருந்து விடுபட விண்ணப்பித்துள்ளோருக்கு முக்கிய தகவல்

breaking
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் உற்பத்திகளை விரிவு படுத்தவும் கடன் சுமைகளிலிருந்து விடுபடவும் அரசாங்கம் வழங்கியுள்ள கடன் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தோருக்கு முக்கிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த அனைவரையும், எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வங்கிகளுக்குச் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கருத்து வெளியிடுகையில், கடந்த அரசாங்கததில் 24 சதவீதம் வரை வரி அறவீட்டை அதிகரித்திருந்ததுடன், வரிப் பணத்தில் அரச வருமானத்தை ஈட்டிக்கொள்ள முற்பட்டனர். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியை தொடர்ந்தே வரிகளை அதிகரித்து அதன்மூலம் வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்டிருந்தனர். ஆனால், எமது அரசாங்கம் மக்களின் வாழ்க்கைச் செலவையும், நாட்டின் அபிவிருத்தியையும் அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்களை எடுக்கும் என குறிப்பிட்டார்.