சீனாவிடம் இருந்து மீண்டும் விமானங்களை கொள்வனவு செய்ய இலங்கை திட்டம்

breaking
சீனாவிடமிருந்து இலங்கை இரண்டு விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 6 மில்லியன் டொலர் செலவில் வை.12 ரக விமானங்கள் இரண்டை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹப்புத்தளையில் 30 வருடம் பழைமையான வை.12 ரக விமானமே உடைந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது எனவும் கூறப்படுகின்றது. இந்த விமானம் சீனாவின் ஹெபின் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் மீண்டும் சீனாவிடமிருந்து இலங்கை விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது.