அரசாங்கத்தை சிறையில் இருந்து இயக்கும் பிள்ளையான்?

breaking
தென் தமிழீழம் , மட்டக்களப்பு சிறைச்சாலையில் கொலைக்குற்றச்சாட்டில் இருக்கும் ஒட்டுக்குழுக்களின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போதைய அரசாங்கத்தை சிறையில் இருந்து இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட சிங்கள அரசாங்க அதிபராக வருவதற்கு பலரது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்த போதும் சந்திரகாந்தனின் சிபாரிசில் கலாமதி பத்மராஜா  மட்டக்களப்பு மாவட்ட சிங்கள  அரசாங்க அதிபராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பில் மக்களால் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கத்தக்கதாக, மாவட்ட செயலாளரை தெரிவு செய்யும் அதிகாரம் கொலைக் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றவாளி எப்படி சிபாரிசி செய்ய முடியுமா? மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள அரசாங்க அதிபர் நியமனம் அரசியல் பின்புலத்தில் இடம்பெறுவதற்கு மாவட்டத்தில் கல்வி கற்றவர்கள் இல்லையா? அல்லது கொழும்பின் குடும்ப ஆட்சியில் தமிழர் பகுதியும் உள்ளடக்கப்படுகிறதா என்ற கேள்விகள் எழுகிறது. குற்றவாளிகளும், திருடர்களும் நாட்டின் ஆட்சியில் கைவைப்பதனால் ஒழுங்கான நிர்வாக நடவடிக்கை நடைபெறுமா? அரசியல் பின்புலத்தில் நியமனம் பெறும் அதிகாரிகள் ஒரு பொம்மையாகத்தான் இருக்க வேண்டும். குற்றவாளிகள் செய்யும் அடாவடித்தனங்களை மாவட்டத்திலுள்ள ஊடகங்கள், பெறுமிதம் கொள்ளும் அளவுக்கு செய்திகளை பிரசூரிப்பது மக்களை பிழையாக வழிநடத்துவதாக அமையும். இதனை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் நடவடிக்கையில் கொலைக்குற்றவாகள் உள்நுழைவதை மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்கள் ஏற்றுக் கொள்கிறதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தில் எழத்தொடங்கியுள்ளது. இதனால் சிவில் அமைப்பு தொடர்பாக அவநம்பிக்கை மக்களிடம் தோன்றியுள்ளது. சிறீலங்கா அதிபர் மோசடிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளை உயர் பதவிகளில் நியமிக்க மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் விசாரணை செய்யப்பட்டவர்களை அரசியல இலாபங்களுக்காக நியமிப்பாரா? என்ற கேள்வி எழுகிறது.