டென்மார்க் மற்றும் ஸ்வீடனை இணைக்கும் 8 கி.மீ. நீள பாலம்!

breaking
ஐரோப்பிய நாடுகளான டென்மார்க் மற்றும் ஸ்வீடனை இணைக்கும் 8 கிலோ மீட்டர் நீள பாலத்தை வர்ணம் பூச 13 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மிக நீண்ட பாலம் கடந்த 2000 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இதன் இரும்பு கட்டுமானத்தை பராமரிக்கும் பொருட்டு ஏற்கனவே 5 அடுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேல் அடுக்கு பூச்சு அடுத்த 10 ஆண்டுகளில் தேய்ந்துவிடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தக்கட்ட பூச்சுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மிக உயரத்தில் தொங்கிகொண்டு ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுவதால் அதிகளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.