இறுதிப் போரில் காணாமல் போனோர் உயிரிழக்கவில்லை வெளிவந்த தகவல்

breaking
இறுதிப்போரின்போது காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மறுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே இதை தெரிவித்தார். மேலும் கூறுகையில் போரின் இறுதி கட்டங்களில் காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் இராணுவத்திடம் சரணடைந்தனர். எனவே பொறுப்புக்கூறலும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்றும் கூறினார். மேலும் இறுதிப்போரின்போது பலர் இராணுவத்தில் சரணடைந்ததற்கான சான்றுகள் உள்ளன. இது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சிறிதரன் சுட்டிக்காட்டினார். இதேவேளை போர்க்குற்ற விவகாரங்களுக்கு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் முறையான தீர்வொன்று கிடைக்கப்படாவிட்டால், உலகில் நிராகரிக்கப்பட்ட இனமான தமிழினம் மாற்றமடையும் என்றும் அவர் கூறினார்.