லெப். கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

breaking
மோட்டார் ஒருங்கிணைப்புத் தளபதி லெப். கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.  
22.01.2000 அன்று வவுனியா மாவட்டம் இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலனாய்வுத்துறை கப்டன் பருதி அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 22.01.2009 அன்று தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும், வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் ,தழுவிக்கொண்ட மோட்டார் ஒருங்கிணைப்புத் தளபதி லெப். கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லெப். கேணல் இசைக்குயிலன் (குருகுலசிங்கம் குணானந்தன் – திருகோணமலை) மேஜர் நிலவன் / இசைக்கடல் (மேரியோசெப் சார்ள்ஸ்யோகு – மன்னார்) மேஜர் காந்தரூபன் (சிறிகானந்தராசா ரஜீந்திரன் – அம்பாறை) மேஜர் தமிழ்மாறன் / இசைக்கோன் (தங்கவேல் சுரேஸ்குமார் – திருகோணமலை) கப்டன் காண்டீபன் (மாசிலாமணி யூட்ஜொனி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஈழக்குன்றன் (இரத்தினசிங்கம் டிலோசன் – 2ம் வட்டாரம், கைவேலி, புதுக்குடியிருப்பு) லெப்டினன்ட் தமிழின்பன் (சிங்கராசா பகீரதன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தமிழ்க்குமரன் (முத்துக்குமார் சுரேஸ்குமார் – பாலிநகர், வவுனிக்குளம்) லெப்டினன்ட் இசைப்பருதி (பேனார்ட் சாலினி – மாமூலை, முள்ளியவளை, முல்லைத்தீவு) வீரவேங்கை பைந்துளசி / வல்லொளி (செல்வராசா யாழினி – செல்விபுரம், பூநகரி) 22.01.2007 அன்று மன்னார் மாவட்டம் கட்டுக்கரைப் பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ஈழவன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 22.01.2007 அன்று பூநகரி தம்பிராய் பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை கரன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.