வானவில் 2020 இசை நிகழ்ச்சிக்கான உள்ளூர் பாடகர்களுக்கான தெரிவு.!

breaking

வானவில் 2020 இசை நிகழ்ச்சிக்கான உள்ளூர் பாடகர்களுக்கான தெரிவு

ஈழத்து தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும், உள்ளூர் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கோடும் மெல்பேணில் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்ற வானவில் இன்னிசை நிகழ்ச்சி, எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் நாள் 2020ம் ஆண்டு, Rowville Performing Art centre இல் நடைபெறவுள்ளது. தாயகத்திலிருந்து இசைக் கலைஞர்கள் வருகை தந்து மெல்பேர்ண் கலைஞர்களோடு இணைந்து வழங்க இருக்கின்ற இந்த இசைநிகழ்ச்சியில் திறமையாக பாடுவதற்கு விருப்புமுள்ளவர்களைத் தெரிவு செய்ய இருக்கின்றோம்.

அந்தவகையில்,  வானவில் - 2020 நிகழ்வில் பாடுவதற்கு விருப்பமும் திறமையும் உடையோர் இந்தத் தெரிவு நிகழ்வில் பங்குகொள்ள முன்வருமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்.

பதிவு செய்துகொள்ள வேண்டிய இறுதிநாள்: பெப்ரவரி மாதம் 05ம் திகதி - 2020 இந்நிகழ்வில் தொண்டர்களாக இணைந்து பணிபுரிய விரும்புவர்களும் எம்முடன் தொடர்புகொள்ளவும். தொடர்புகளுக்கு (Contact): 0450 662 990 or 0403 470 968 or 0404 354 811 கீழ்வரும் மின்னஞ்சலுக்கும் அனுப்பிவைக்கலாம் - Tamil Community Empowerment Council Australia: [email protected]