லெப். கேணல் கோபி மாஸ்ரர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

breaking
லெப். கேணல் கோபி மாஸ்ரர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.01.1991 அன்று ஆனையிறவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலனாய்வுத்துறை வீரவேங்கை பற்றிக் அவர்களின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
26.01.2009 அன்று தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும், வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கோபி மாஸ்ரர் உட்பட ஏனைய மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
லெப்.கேணல் கோபி மாஸ்ரர் (திருநாவுக்கரசு சதீஸ்குமார்)
மேஜர் அகன் (மங்களேஸ்வரன் சுரேஸ் – ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு)
மேஜர் மச்சவல்லவன் (இராமையா சேர்வைநடராசா – புலோப்பளை கிழக்கு, யாழ்ப்பாணம்)
மேஜர் பேரன்பு (சண்முகலிங்கம் சுதாகரன் – யாழ்ப்பாணம்)
மேஜர் குறிஞ்சிச்சுடர் (தில்லைநாதன் கஜேந்திரா – ஜெயந்திநகர், கிளிநொச்சி)
மேஜர் மதிமாறன் / ஈழக்கடல் (மகேந்திரன் திலீபன் / தினேஸ் – மன்னார்)
மேஜர் பிறைசூடி / கீர்த்தனன் (தங்கவேல் தங்கேஸ்வரன் – பொன்நகர், திருமுறிகண்டி, கிளிநொச்சி)
கப்டன் கலையரசன் (திருஞானம் அன்ரன் ஜெயக்குமார் – இரணைமாதா நகர், முழங்காவில், முல்லைத்தீவு)
கப்டன் அறிவாளன் (முத்தையா ஜெயந்தகுமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் சாளரசன் (சத்தியசீலன் ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் அன்புமலை (லக்சுமிகந்தராசா கிருஸ்ணராஜ், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஒளிநிலா / தூயமுல்லை (இரத்தினம் சுஜித்தா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அல்லியரசி (கதிரவேலு புனிதவதி – யோசப் கடை, மலையாளபுரம், கிளிநொச்சி)
லெப்டினன்ட் அரசி /குமுதா (சுப்பிரமணியம் பிரியதர்சினி – ஆனந்தபுரம், கிளிநொச்சி)
லெப்டினன்ட் சீர்விழி (இராமநாதன் தயாளினி – செல்வாநகர், கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் அரிகரன் (அன்னலிங்கம் ரதீஸ் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் நவநீதன் (அழகிப்பொடி சோமசுந்தரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை மலரவன் (செல்வராஜா கவிதாஸ் – யாழ்ப்பாணம்)
போருதவிப்படை வீரர் ராகுலன் (யோகேந்திரன் ராகுலன் – செஞ்சுடர் குடியிருப்பு, கைவேலி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
 
 
26.01.2007 அன்று யாழ். மாவட்டம் கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் கார்முகிலன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
 
 
26.01.2007 அன்று யாழ். மாவட்டம் முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை பாமா அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
 
 
தாய்மண்ணின் விடிவிற்காக 26.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் அசோகன், லெப்டினன்ட் கானக்கதிர் / கதிர், லெப்டினன்ட் வஞ்சி, 2ம் லெப்டினன்ட் திருவேந்தி, 2ம் லெப்டினன்ட் இன்மொழி, வீரவேங்கை செங்கையாழினி ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”