மண் அகழ்வினை தடுக்கக்கோரி கிரானில் மீண்டும் போராட்டம்

breaking
  தடுக்கக்கோரி மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (27) இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்டது. பிரதேச மக்கள், மாணவர்கள் மற்றும் விவசாய அமைப்புக்கள் என்பன இணைந்து இவ் போராட்டத்தினை மேற்கொண்டனர். இன்று காலை கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் கூடியவர்கள் வீதியினை மறித்து வாகன போக்குவரத்தினை தடைசெய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது பிரதேசத்தில் அளவிற்கு அதிகமாகவும் கட்டுப்பாடின்றி மண் அகழ்வினை மேற்கொண்டு வரும் நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி இவ் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வீதியால் அச்சத்துடன் போக்குவரத்து செய்ய வேண்டியுள்ளதுடன் மண் அகழ்வினால் பல்வேறுபட்ட பிரச்சினைகனை தாம் எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அறுவடைக்கு சென்ற விவசாயிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச, தனியார் அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் சிரமத்தினை எதிர்நோக்கியிருந்தனர். இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவுவிடம் தங்களது கோரிக்கையினை தெரிவித்தனர். குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் சமூக அமைப்புக்கள் மற்றும் மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபடுவர்களுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு அதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாகவும், அவர்களது ஆர்பாட்டத்தில் நியாயம் உள்ளதாகவும் மீண்டும் உயிரிழப்புக்கள் ஏற்படக் கூடாது எனவும் பிரதேசத்தின் விவசாய நிலங்கள் மற்றும் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரதேச செயலாளர் இதன்போது போராட்டக்காரர்களிடம் தமது கருத்தினை தெரிவித்தார். இதனை அடுத்து போராட்டம் முடிவுற்றது. கடந்த புதன் கிழiமையன்று (21) அன்று குறித்த பிரதேசத்தில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமொன்று குடும்பஸ்த்தர் ஒருவரை மோதி விபத்திற்குள்ளாக்கி உயிரிழக்கச் செய்த சம்பவத்தினை அடுத்து கிரான் பிரதேசத்தில் முன்னெடுக்கப்ட்ட இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம் இதுவாகும்.