வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்

breaking
வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் உயர்ந்த நிலப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அலுவலகம் மஞ்சள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இப்பிராந்தியங்களில் இன்று இரவு கடும்குளிராக இருக்கக்கூடும் எனவும் பனிப்பொழிவினால் போக்குவரத்துக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் இன்று இரவு வெப்பநிலை -8 C ஆகக் குறையக்கூடும் எனவும் இருப்பினும் இதனைவிடவும் மிகக் குறைந்த வெப்பநிலையான -10 C வரை செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாக ஸ்கை நியூஸின் வானிலைக் குழு தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் குளிர்ந்த காற்று வீசும் அதேவேளை பகல்நேர வெப்பநிலை சராசரியாக 2 C ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் டிசெம்பர் மாத வெப்பநிலை சராசரியாக 1.2 C ஆக இருந்தது. எனினும் ஜனவரி மாத வெப்பநிலை உயர்வாக இருந்தது.