கோத்தாவின் வருகையும் சீனாவின் ஆளுகையும் :  வைரஸ்சால் திணறும் சிறிலங்கா

breaking
சிறிலங்காவில் புதிதாக ஆட்சிக்கு வந்த கோத்தபாயாவின் அரசாங்கம் பிராந்திய வல்லாதிக்க போட்டியில் சீனா பக்கம் சாய்ந்ததுடன் என்றுமில்லாதவாறு சிறிலங்காவில் சீனர்கள் பணிபுரிவது அதிகரித்துள்ளது. இதே வேளை சீனாவில் ஆரம்பித்த கொரொனா வைரசின் தாக்கம் மெல்ல மெல்ல மற்ற நாடுகளையும் அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது. சிறிலங்காவிலும் கொரொனா வைரஸ்சால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார். அண்மைய கணக்கெடுப்பின்படி 250000 (இரண்டு லட்சத்தி ஐம்பதினாயிரம்) வரையான சீனர்கள் சிறிலங்காவில் பல்வேறு பட்ட வேலைகளில் இருப்பதாக தெரியவந்துள்ளதுடன் சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் அவர்களது போக்குவரத்தும் அதிகமானதாகவும் இருக்கிறது. இதமிழர் தாயகப்பகுதியான மன்னார் பகுதியில்  40000 ஆயிரத்திற்கு மேற்பட்ட சீனா நாட்டவர்கள் பணிபுரிவதாகவும் தெரியவருகிறது.   சிறிலங்காவில் வைரசின் தாக்கத்தால் சீனர் ஒருவர் இனங்காணப்பட்டமையும் சிறிலங்காவில் உள்ள அதிகளவான சீனர்களின் இருப்பும் அபாயகரமான நிலையை உருவாக்கியுள்ளது