எங்கே எங்கள் வணபிதா பிரான்சிஸ் யோசப் அடிகளார்!

breaking
தமிழீழத்தில்  உள்ள முன்னணிக் கத்தோலிக்கப் பாடசாலைகளுள் ஒன்றான யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார்(Rector/Principal of St. Patrick’s College,Jaffna)கல்லூரியின் முதல்வராக அரும்பணி ஆற்றியவர்.
ஒன்றரை நூற்றாண்டுப் பழம்பெருமை கொண்ட சம்பத்திரிசியார் பாடசாலையின் அரும்பெரும்சரிதத்தில் இவரின் வரலாறு பல அத்தியாயங்கள் கொண்டது .
அர்த்தம் பொதிந்த அவர்தம் வாழ்நாளில்பல ஆயிரம் புத்திஜீவிகளையும் கல்விமான்களையும் இந்த உலகிற்குத் தந்தவர்தான் எங்களின் வண பிதா பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்.
தமிழீழக் கல்வி மேம்பாட்டு பேரவையின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஆற்றிய தொண்டுகளை இங்கே வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.
இறுதிப்போரின் போது இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ச காலத்தில் படையினரிடம்  பங்குத்தந்தை பிரான்சிஸ்   மற்றும் போராளிகளும் மக்களும்  பேரினவாத சிங்கள படையினரிடம் சரணைந்தார்கள் அவர்கள் இன்று வரை என்ன ஆனார்கள்  என்று  அதிகாரப்பூர்வமாக தெரியாத  நிலையில்   சரணடைந்த  எமது உறவுகள் முதலைக்கு தீனியாக்கப்பட்டார்கள் என்றும் , சில நாள் முன்பு   காணமல் போனவர்கள் எல்லாம்  மரணமடைந்து விட்டதாகவும் இனப்படுகொலையாளி கோத்தபாய  ராஜபக்ச  தரப்பு சொல்லுகிறது ,
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில்  சிங்கள பேரினவாத படையினரிடம் சரணடைந்து காணாமல் போன எமது உறவுகள் நிலை தான் என்ன?    தமிழீழக் கல்வி மேம்பாட்டு ஊடக எமது  இளையோர்களை அறிவுஜீவிகளாக உருவாக்கிய எமது பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்   எங்கே?
இவ்வாண்டு நடைபெறும் ஜெனீவா அமர்வில் குறித்த  இனப்படுகொலைகள் விவாதிக்கப்பட்டு    எமக்கான நீதி   கிடைக்குமென்பதில் ஜயமில்லை அதற்க்கான நடவடிக்கைகளை புலம்பெயர்  எமது  இளையோர்கள் முன்னெடுத்துச்சென்றால் சாத்தியம்