விடுதலைப் புலிகள்  ஆதரவாளர் சாமிநாதனுக்கு ஆதராவாக களமிறங்கும் மலேசிய வட்டம் .!

breaking
தமிழீழ விடுதலைப் புலிகள்  ஆதரவாளர்  (சொஸ்மா) கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜி. சாமிநாதனின் ஜாமீன் விண்ணப்பத்தை நீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து தொழிலதிபர் ஒருவர் காவல் துறையில் புகார் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு சட்டம் 2001 (அம்லா) கீழ் விடுதலைப் புலிகள் இயக்கம் சேர்க்கப்பட்ட போதிலும், மலேசியாவில் “பயங்கரவாத குழு” என்று அது வகைப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறினார். “ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்  அம்லாவின் கீழ் ஒரு குழுவாக மட்டுமே வர்த்தமானி செய்யப்படுகிறது.” “ஆகவே, 2009 முதல் செயலற்ற நிலையில் உள்ள இக்குழு தொடர்பான நடவடிக்கைகளுக்கு அவர்கள் பங்களிப்பு செய்தால் மட்டுமே புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஒருவர் மீது குற்றம் சாட்ட முடியும்” என்று அவர் நேற்று இரவு வியாழக்கிழமை கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் சாமிநாதனும் ஒருவர். அரசாங்க சார்பற்ற நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காததை ஓம்ஸ் தியாகராஜன் என அழைக்கபடும் அவர் கேள்விகளை எழுப்பினார். புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி இந்த அமைப்பு இலங்கை அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டதாக அவர் கூறினார். தமிழர் பேரவை மலேசியா என்ற அந்த அமைப்பு மலேசியாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதியுதவியை வசூலித்ததை அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், 12 நபர்களைக் கைது செய்தது தொடர்பாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை சந்திக்க முயற்சிகள் எடுத்து வருவதாக சாமிநாதனின் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.