மலேசியா தைப்பூசத்தில் கண்கவர் காவடிகளின் அணிவகுப்பு.!

breaking
ஜோர்ஜ்டவுன் – பினாங்கு மாநிலத்தில்  கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழாவில் இலட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதோடு, பல பக்தர்கள் அழகாகக் காவடி எடுத்து முருகப் பெருமானுக்குத் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்தினர். எனினும் பல பக்தர்கள் காவடி எடுத்து அணிவகுத்து வந்தபோது பின்னணியில் சினிமாப் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதும், பாடப்பட்டதும் பல பக்தர்களை முகம் சுளிக்க வைத்ததோடு, பக்திமயமான தைப்பூசச் சூழலைக் கெடுக்கும் விதத்தில் இருந்தது என இந்தக் காட்சிகளை நேரில் பார்த்த பல பக்தர்கள் தெரிவித்தனர்.