கொரோனா பாதிப்பை தடுக்க முகமூடியை கண்டுபிடித்த தமிழக இளைஞர்!

breaking
கொரோனா பாதிப்பை தடுக்க முகமூடியை கண்டுபிடித்த தமிழக இளைஞர்! தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் அடுத்த திருநகரில் காலனியை சேர்ந்தவர் சுவாமிநாதன் இவரது மகன் விக்னேஷ்.இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரி இவர் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் கார்பன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதன்பின்பு கார்மெண்ட்ஸ் குறித்து அதிக ஆர்வம் கொண்டு இணைய தளம் மூலமாக பல்வேறு ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் வீட்டில் இருந்த படியே செய்து வந்தார். இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் மேலும் மற்றவர்களை பாதிக்காமல் இருப்பதற்காக மாஸ்க் அணியும் படி சீன அரசு அறிவிக்கப்பட்டது. இதனால் சீனாவில் மாஸ்க் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் நாளடைவில் அதிக மக்களை பாதிப்படைய செய்து பல உயிரிழப்பு ஏற்பட்டன தொடர்ந்து ஆயிரக்கணக்கான பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தநிலையில் விக்னேஷ் அன்றாடம் பயன் படுத்தப்படும் பென்சிலில் உள்ள கிராபெனின் என்னும் பொருளை வைத்து புதியதாக மாஸ்க் கண்டுபிடித்துள்ளார். இவர் கண்டு பிடித்த மாஸ்க் பென்சில் உள்ள கிராபெனின் என்ற பொருளை நன்றாக பொடியாக்கி மாஸ்க் மீது தடவி அல்லது கண்ணாடி டேப் மூலமாக மாஸ்க் மீது ஒட்டவைத்தால் அதன் துகள்கள் 0.142 என்.எம். அளவுக்கு மட்டுமே இருக்கும். இதனால் கொரோனா வைரஸ் மற்றவர்களை தொற்றாமல் இருக்கும் அந்த மாஸ்க்கை பயன்படுத்தினால் 95 சதவீதம் தொற்றுவது குறையும் என்று தான் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வை research gate என்ற இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை அந்த இணைய தளத்தில் உள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு இதை சீனா அரசு பரிந்துரைக்கலாம் என்று அந்த இணையதளத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது சீன மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என பொறியியல் பட்டதாரி விக்னேஷ் தெரிவித்துள்ளார்.