உங்களுக்கு தெரியுமா?: ஆண்களா பெண்களா கொரொனாவால் பாதிக்கப்படுவது அதிகம்...?

breaking
  கொரோனா வைரஸால் பெண்­களை விடவும் ஆண்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டு­வ­தாக அந்த வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­ன­வர்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. சீனாவில் மேற்­படி வைரஸ் தொற்றின் தோற்­றுவாய் பிராந்­தி­ய­மான வுஹான் நக ரில் அந்த வைரஸ் பரவ ஆரம்­பித்த நிலை யில் பெறப்­பட்ட தர­வு­களின் பிர­காரம் அந்த வைரஸால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 68 சத­வீ­த­மா­ன­வர்கள் ஆண்கள் என ஆய்­வொன்றின் மூலம் அறி­யப்­பட்­டுள்­ள­தாக பிஸினஸ் இன்­சைடர் ஊடகம் அறிக்­கை­யிட்­டுள்­ளது. அதே­ச­மயம் வுஹான் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னையில் மேற்­படி வைரஸ் பரவ ஆரம்­பித்த காலத்தில் அனு­ம­திக்­கப்­பட்ட 138 நோயா­ளி­க­ளி­ட­மி­ருந்­தான தர­வு­களை அடிப்­ப­டை­யாக வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட பிறி­தொரு ஆய்வு கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களில் 54.3 சத­வீ­த­மா­ன­வர்கள் ஆண்கள் எனத் தெரி­விக்­கி­றது. அந்த நோயா­ளி­களில் கால் பகு­தி­யினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­ட­துடன் 4 சத­வீ­த­மா­ன­வ­ர்கள் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். ஆனால் எதனால் ஆண்கள் இந்த வைரஸ் தொற்றால் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டனர் என்­ப­தற்­கான காரணம் தெளிவற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதி­க­ளவில் வய­தான ஆண்­களே இந்த வைரஸால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் ஆய்­வா­ளர்கள் ஏன் இந்த வைரஸ் ஆண்­களை அதி­க­ளவில் பாதித்­துள்­ளது என்­பது தொடர்­பிலும் பெண்கள் மற்றும் சிறு­வர்கள் இந்த வைரஸ் தொற்­றி­லி­ருந்து பொது­வாக பாது­காப்பைப் பெற கார­ண­மாக அமைந்­தது எது என்­பது குறித்தும் ஆராய்ந்து வரு­கின்­றனர். அதற்கு ஏனைய அடிப்­படை உடல்­நல நிலை­மைகள் அல்­லது பெண்­க­ளது பாலி யல் ஹோர்­மோ­னான ஈஸ்ட்­ரோ­ஜனின் பாது­காக்கும் தன்மை என்­பன கார­ண­மாக இருக்­கலாம் என நிபு­ணர்கள் நம்­பு­கின்­றனர். மேற்­படி நோயா­ளிகள் 22 வய­துக்கும் 56 வய­துக்கும் இடைப்­பட்­ட­ வ­ய­து­டை­ய­வர்­க­ளாக இருந்­தனர். மேலும் அவர்­களில் 46.4 சத­வீ­த­மா­ன­வர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரி­ழிவு, இரு­தய நோய் மற்றும் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந்­நி­லையில் இந்த நோய் பாதிப்பு நிலை­மைகள் மற்றும் பெண்­க­ளுக்கு ஈஸ்­ரோஜன் ஹோர்மோன் சுரப்புக் குறையும் 45 வய­துக்கும் 55 வய­துக்கும் இடைப்­பட்ட மாத­விடாய் நிற்கும் காலம் என்­பன இந்த வைரஸ் தொற்றில் பங்­க­ளிப்பு செய்­துள்­ளதா என்­பதை ஆய்­வா­ளர்கள் ஆராய்ந்து வரு­கின்­றனர்.