வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் புகையிரத திணைக்களம்

breaking
  புகை­யி­ரதத் திணைக்­க­ளத்தில் கடந்த ஆறு வரு­ட ­கா­ல­மாக தற்­கா­லிக மற்றும் ஒப்­பந்த அடிப்­ப­டையில் தொழில் புரிந்­த­ வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­குவ­தற்கு புகை­யி­ரதத் தொழிற்சங்­கங்கள் சிறிலங்கா அர­சாங்­கத்­துக்கு 48 மணி­ நேர கால அவ­காசம் வழங்­கி­யுள்­ளன. உரிய காலப்­ப­கு­தியில் தீர்வு கிடைக்­கப்­பெ­றா­விடின் அடுத்த கட்­ட­மாக வேலை­நி­றுத்­தத்­துக்குச் செல்ல தீர்­மானம் எடுக்­கப்­படும் என புகை­யி­ரத தொழிற்சங்கம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. இது தொடர்பில் புகை­யி­ரதத் தொழிற் சங்­கத்தின் தலைவர் எஸ்.பி.விதா­னகே கருத்துத் ‍தெரி­விக்­கையில், இலங்கை புகையி­ரதத் திணைக்­க­ளத்தில் கடந்த ஆறு வரு­ட­ கா­ல­மாக தற்­கா­லிக மற்றும் ஒப்­பந்த அடிப்­ப­டையில் தொழில் புரிந்த ஊழி­யர்­க­ளுக்­கான நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­கு­மாறு கோரி கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு முன்­பாக எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்தோம் . அதன் போது ஜனா­தி­பதி செய­ல­கத்தில் எமது கோரிக்­கையை முன்­வைப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டது. இருப்­பினும் அந்தக் கலந்­து­ரை­யா­டலின் போது எமது பிரச்­சி­னைக்குத் தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை. நேற்­றைய தினம் (புதன்­கி­ழமை) போக்­கு­வ­ரத்து அமைச்சின் செய­லாளர் மற்றும் உரிய உயர் அதி­கா­ரி­க­ளு டன் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டு நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படுவ­தாக ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போது தெரி­விக்­கப்­பட்­டது. அதே­வேளை, அந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­துக்­கான அனு­மதி கிடைக்­கப்­பெற்­ற தும் அடுத்த 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் எனவும் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் நிரந்­தர தொழில் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டா­விடின் தொழில் சங்கங்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு இறுதிக் கட்ட முடிவு எடுக்கப்படும். அதற்கமைய அடுத்த கட்டமாக தொடர் போராட்டத்துக்கோ அல்லது வேலை நிறுத்தத்துக்கோ செல்லத் தயாராகவே உள்ளோம் எனத் தெரிவித்தார்.